ஒரு லட்சம் பார்வையையைக் கடந்து பயணிக்கிறது நமது "திசைச்சொல்"
2010 ன் தமிழ்சமூகத்தின் காலம் ஆன்ராய்ட் கைபேசி,கூகுள் மின்னஞ்சல்,ஒருங்குறி,பேனாவை விலக்கி கணினியில் தட்டச்சுவது,முகநூல் ,சமூகஊடக உலகம் என தமிழ்சமூகம் நவீனப்பட்டதொரு காலம்.
இதோடு கூட ப்ளாக்கர்ஸ் ரைட்டிங் என்ற வலைப்பூக்களும் இணைந்து கொண்ட காலமது.
மாதவராஜின் தீராத பக்கங்கள் ஒரு ரோல்மாடல் தளமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.தமிழ்வீதி என ப்ளாக்கில் ச.தமிழ்ச்செல்வன் அலையத் தொடங்கினார். தந்துகி என ஆதவன் கம்பு சொழட்ட தொடங்கினார். எங்கள் முன்னத்தி தோழர் சிகரம் செந்தில்நாதன் இந்தப் பெயரிலேயே வலைப்பூ தொடங்கி சளைக்காமல் எழுதி ஓட்டத்தில் பயணித்தார்.
நம்ம அசாக்கும் அசாக் என பெயர் சூட்டி நைட்டிசன் ஆகி விட்டார்.கவின்மலர் என்ற பெயரிலேயே எங்க கவினும் வலைப்பூ பதிவராகி வழிகாட்ட தொடங்கி விட்டார்.பெருவெளிப்பெண் என ச.விசயலட்சுமியும் வலைப்பூவில் இயங்கத் தொடங்கி விட்டார்.
இத்தகைய சூழலில் எனக்குப் பிரியமான பாரதியின் முண்டாசு முகத்தை ஐகானாக கொண்டு, "திசைச்சொல்" என்ற வலைப்பூவை 2010 ல் தொடங்கினேன்.
2026 வரை கடந்த பதினாறாண்டு காலத்தில் தொடர்ச்சியாக எழுதி இருக்கிறேன்.
முதல் சில ஆண்டுகள் வாரத்திற்கு ஒன்று என எழுதி இருக்கிறேன். போகப் போக வேகம் குறைந்து போனது ஆனாலும் வலைப்பூவை விட்டு விடவில்லை. 156 பதிவுகள் படைப்புகள் அனுபங்கள் என எழுதி இருக்கிறேன்.
என் வலைப்பூ தளம் தொடக்கத்தில் கூகுள் ப்ளாக்கர் தளம், தமிழ்மணம் , முகநூல்,வாட்ஸ் ஆப் தளங்களின் வழியாக பலரின் பார்வைக்குப் போனது.
அந்தந்த காலத்தின் உணர்வுகள் அனுபவங்களை அப்பொழுதே எழுதி விட வேண்டும்.இவ்வாறு எழுதியும் இருக்கிறேன்.அவ்வாறு எழுதும் எழுத்துகள் புதிய காலத்திற்கு கடந்த காலத்தை அறிமுகம் செய்கிற எழுத்தாக அவைகள் அமைந்து விடுகின்றன. இனி நிறைய எழுத வேண்டுமென இந்த அனுபவம் உணர்த்துகிறது.
இந்த ஆசைக்கு உறுதுணையாக என்றுமான பிரிய அன்பன் மாதவராஜின் தமிழ் திரட்டி உதவியாக வந்திருக்கிறது
இந்த 16 ஆண்டு காலத்தில் எனது திசைச்சொல் ஒரு லட்சம் வாசகப் பார்வையை கடந்த வாரம் கம்பீரமாகக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.
வாசகர்கள் தோழமைகள் மாணவர்கள் இளைஞர்கள் அனைவருக்கும் இனிதான அன்பை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
வருக இணைந்து பயணிப்போம்; முன் எப்போதும் இல்லாத புதிய சூழலில் நாம் இணைந்து வாசிப்பதும் விவாதிப்பதும் முதன்மையாகிறது.
இதை சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் நன்றி 🙏

No comments:
Post a Comment