Wednesday, July 27, 2011

ஊழலுக்கெதிராய் இடதுசாரிகளின் சங்கநாதம்


மதவாதம்,ஊழல்,குடும்ப ஆட்சி,பயங்கரவாதம் போன்ற பிரச்சினைகளின் ஆழத்தையும் கொடூரத்தையும் மக்கள் புரிந்து வருகிறார்கள் .இதன் வெளிப்பாடுகளை தேர்தல் மற்றும்,பல்வேறு இயக்கங்களில் பார்க்கிறோம்.

அறிவாளிகள்,எழுத்தாளர்கள் இடையே ஒரு மோஸ்தர் போல ஊழலை கண்டிக்கிறோம் என்று சொன்னாலும் இதற்கான இயக்கங்களில் பங்கேற்பதில்லை.

இந்த புள்ளியை பாபாக்களும்,ஹசாரேக்களும் பயன் படுத்தி ,அறுவை சிகிச்சைக்கு பதில் புனுகு பூசும் வேலையை செய்கிறார்கள்.

இந்திய சந்தையில் கார்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம் மேம்பட்ட கடந்த 20 ஆண்டு காலத்திற்க்கு பின்பே மெகா ஊழல்களை பார்க்க ஆரம்பித்திருக்கிறோம்.

ஊழல்கள் நடைபெற்ற பின்பு கண்டிப்பது,தண்டிப்பது என்பதை விட ஊழலின் ஊற்று கண்ணான கார்பரேட் ஆதிக்க சார்பை எதிர்த்து குரல் கொடுப்பதும்,இதற்க்கு நடை பாவாடை விரிக்கும் அரசுகளை மாற்ற இயங்குவதுமே தீர்வு.

அரசியல் ஆர்வலர்கள்,களப்போராளிகள் இத் தீர்வை நோக்கிய போராட்டத்தில் இறங்கும் போது,மக்களின் மனசாட்சியான அறிவாளிகள்,கலைஞர்கள்,எழுத்தாளர்கள் இவ்வியக்கத்தை ஆதரித்து நிற்க்க வேண்டும்.

நாடு தளுவிய இடதுசாரிகளின் ஊழல் எதிர்ப்பியக்கம் சென்னையில் நாளை ஜீலை 19 மாலை 5.30 முதல் 8வரை ,மெமோரியல் ஹால் முன்பு நடைபெறுகிறது.ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகள்வாய் நடைபெறுகிறது.

சுதந்திர போராட்ட வீரர்கள் தோழர்கள் சங்கரையா,நல்லகன்ணு,என்.வரதராசன் மேலும் பிருந்தாகாரத்,தா.பாண்டியன்.ஜி.ராமகிருஸ்ணன் பங்கேகிறார்கள்.

இவர்களோடு எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணன்,பத்திரிகையாளர் ஞானி,இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்,கல்வியாளர் வசந்திதேவி,எஸ்.எஸ்.ராஜகோபாலன் பங்கேகிறார்கள்.
இதில் நீங்கள் எந்த பக்கம்?

Thursday, July 7, 2011

கைத்தடி ஏந்திய காவலன்


  
 ஆண்மையின் ஆதிக்கங்களிலிருந்தும்
பெண்மையின் இயலாமையிலிருந்தும்
பெண்மை வன்மையோடு எழ
உண்மை பேசியவன் நீ

இனஇழிவு அழிப்பதற்க்காய்
இறுதி நாள் வரையிலும்
கலகம் செய்த
கலகக்காரன் நீ

இருபத்தி இரண்டு ஆண்டுகளாய்
இட ஒதுக்கீட்டு கர்ப்பத்தை
வலிக்க வலிக்கச் சுமந்த
அதிசயத் தாய் நீ

அரசியல் சாசனத்து
ஆரம்பத் திருத்தத்தின்
ஆதிமூலமும் நீ

தமிழுக்கும் தலித்திற்க்கும்
கோயில்களில்
இடம் தரச்சொன்ன
நிரந்தரம் நீ

இந்துத்வா  இடுப்பொடிக்க
என்றும்
கைத்தடி ஏந்திய
காவலன் நீ 

   

Sunday, July 3, 2011

நீ பேசாத நாட்களில்...



பின்னிரவு தாண்டியும்
தொடர்ந்த
உன் நேசம் பொதிந்த உரையாடல்
அறையெங்கும் நிறைந்து படர்ந்து 
பொழுதுக்கேற்ற மொழிகளோடு
உரையாடிக் கொண்டிருக்கின்றன
நீ பேசாத நாட்களில்