இணைந்த இதயம்

Wednesday, January 30, 2013

விஸ்வரூபம் :சர்ச்சையும் சந்தேகமும் 2
நேற்று ஒரு நபர் அமர்வு(வெங்கட்ராமன்) சென்னை உயர்நீதிமன்றம்,
விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்திருந்த 15 நாட்கள் தடையை விலக்கி அளித்த  தீர்ப்பின் மீது இன்று மாலை(ஜனவர் 30) இருவர் அமர்வு நீதிமன்றம்(தலைமை நீதிபதி பொறுப்பு எமிலி தர்மாராவ்,அருணா ஜெகதீசன்) தடை விதித்திருக்கிறது.

வரும் திங்கள் அன்று அரசு தரப்பு விளக்கத்தை இருவர் அமர்வு நீதிமன்றம் கோரி இருக்கிறது.பிப்ரவரி 6 அன்று இதன் மீது இறுதி தீர்ப்பு அளிப்பதாக நம்பப்படுகிறது.

இஸ்லாமிய தரப்பிடமிருந்து பெறப்பட்ட புகாரின் மீது ஓர் ஆக்கப்பூர்வமான தீர்வை எட்டுவதற்கு மாறாக செங்கோல் ஏந்தி பரிபாலனம் செய்ய வேண்டிய அரசு,செங்கோலை கன்னக்கோலாக மாற்றி இருக்கிறது.

நேற்று வந்த தீர்ப்பை ஒட்டி தமிழ்நாடு எங்கும் பல திரையரங்குகளில் இன்று  காலை காட்சியாக படம் ஓடிக்கொண்டிருந்த பொழுது அதிமுக தரப்பினர் காவல்துறை உதவியோடு திரையரங்கினுள் நுழைந்து காட்சியை நிறுத்தவும் பொதுமக்களை பீதிசெய்தும் ரகளை செய்திருக்கின்றனர்.இதை அரசு செய்ய வேண்டியது என்ன என்ற கேள்வி பெரிதாய் எழுகிறது.

விஸ்வரூபம் திரைப்படத்தின் செய்தி இதன் ஆக்கம் என்பது பேசப்படவேண்டியதுதான்.விவாதிக்கப்படவேண்டியதுதான்.ஆனால் விவாதிக்கப்பட வேண்டிய விடயத்தை வேதனையாக்கி தீர்விற்கு உதவி செய்ய வேண்டிய அரசே எதிர்தரப்பாக மாறி நிற்பது வேதனையானது

 இன்று கமல்ஹாசன் அளித்திருக்கும் பேட்டியில் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் மதச்சார்பின்மையை மதிக்கும் மாநிலம் அல்லது தேசத்தில் குடியேறுவேன் என்று சொல்லி இருக்கிறார்.நீதிபதி நீதிமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு கமல்ஹாசன் பதில் சொல்கையில் தேசஒற்றுமையா?அல்லது தனிநபர் சுதந்திரமா? என்றால் தேசஒற்றுமை முக்கியம் என்றும் பதில் சொல்லி இருக்கிறார்.

இன்று மாலை இஸ்லாம் தூதுக்குழு ஒன்றிடம்(ஹாருண் எம்.பி,,பஷீர் அகமது உள்ளிட்ட குழு) கமல் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்கள் சுட்டிக் காட்டிய எழுதிக் கொடுத்திருக்கக் கூடிய ஆட்சேபங்களை நீக்கி படத்தை வெளியிட தயார் என்று அறிவித்திருக்கிறார்.

இந்த சந்திப்பிற்கு கவிஞர் வைரமுத்து பாலமாகச் செயல்பட்டிருக்கிறார்.இனிமேல் இந்த படம் குறித்து எந்த கருத்து வித்தியாசங்களும் தமக்கோ அல்லது இஸ்லாமிய குடும்பத்தினருக்கோ இல்லை என்றும் கமல் அறிவித்திருக்கிறார்.

இஸ்லாமிய தரப்பிலிருந்து இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு வரும் என்று சொல்லியே அரசு இன்று வரை பேசிவருகிறது.இன்றைக்கு எதிர்ப்பு காட்டிய அமைப்புகளே பேச்சுவார்த்தையில் தீர்வை எட்டியிருக்கிறது.எதை சொல்லி நீதிமன்றத்தில் இதுவரை  ஜெயலலிதா அரசு வாதாடியதோ அந்தக் காரணமே இப்பொழுது இல்லை என்றான பின் அரசு தன் விளக்கத்தை எப்படி அளிக்க இருக்கிறது என்று பின்னர் பார்ப்போம்.

இந்த அச்சுறுத்தலிற்கு ஜெயலலிதாவிற்கு தூபம் போட்டவர்கள் தமிழ்நாட்டு உள்துறைச்  செயலாளர் ராஜகோபாலன் மற்றும் சென்னை மாநகரகாவல் ஆணையர் ஜார்ஜ் என்றும் சொல்லப்படுகிறது.

அரசின் இந்த அச்சுறுத்தல் காரணமாக கமல்ஹாசன் மீது பெரியளவிற்கு அனுதாபம் ,ஆதரவு அலை உருவாகிக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது.


6 comments:

 1. மகிழ்ச்சி;உங்கள் வாசிப்பிற்கு அன்பினிய தோழர்

  ReplyDelete
 2. நல்ல கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் தோழரை

  ReplyDelete
 3. நன்றி இன்றையவானம்

  ReplyDelete
 4. கமலுக்கு அனுதாப அலை ஏற்பட்டிருப்பது மட்டும் இல்லை. முஸ்லிம்கள் எப்பவுமே இப்படித்தான் என்பதான முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு மனநிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது தடை மேல் தடை.

  ReplyDelete
 5. இந்தியாவில் இஸ்லாமியர்களின் வாழ்நிலை குறித்த அச்சமானது,நிதான அணுகுமுறையை யோசிக்கவிடாது செய்திருக்கிறது என கருத வேண்டி உள்ளது யுவபாரதி

  ReplyDelete