இணைந்த இதயம்

Sunday, June 30, 2013

சமணர்கள் யார்?


இவர்கள் பிராமணர்கள் அல்லர்.பிராமணர்களுக்கு முன்பு,இந்தியாவில் ஆரிய குடியேற்றம் நிகழ்வதற்கு முன் இருந்த,திராவிடர்களின் சமயம் இது.

சமணம் என்றால் உருவ வழிபாடற்ற சமயம் என்று பொருள்.
ஆன்மாவில் நம்பிக்கை இல்லாத ,இயங்கு பொருள்(matter) சார்ந்த செயற்பாட்டின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள்.
இந்தப் பார்வை வைதீக மதமான பிராமணியத்திற்கு ,பிற்காலத்தைய இந்து மதத்திற்குக் கிடையாது.

அன்றைய இனக்குழு,அதன் பின்னான தொடக்க வேளான் சமுகப் பொருளாதாரத்தின் மையமாக விளங்கிய ஆடு,மாடுகளை அழிப்பதிலிருந்து காக்க வேண்டி,கொல்லாமை,புலால் உண்ணாமையை கடைபிடிக்க வழி காட்டியவர்கள்.

இந்தியாவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயன்ற வைதீக மதம்,இவர்களிடமிருந்தே புலால் புசிப்பதை விடுத்து,புலால் மறுப்பை கடைபிடிக்கத் தொடங்கினார்கள்.

தொல்காப்பியர்,திருவள்ளுவர்,இளங்கோவடிகள் போன்றோர் சமணம் சார்ந்த படைப்பாளிகள்;அறிவாளிகள்.

தத்துவம்,அறிவியல்,இலக்கியம்,கலை,மருத்துவம் போன்ற துறைகளில் சமண அறிஞர்கள்,கலைஞர்கள்  மதிப்புவாய்ந்த பங்களிப்பை தமிழுக்குச் செய்தவர்கள்.

கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரை செல்வாக்கோடு இருந்து,மாறிய சமுகத்தின்  பொருள் சார்ந்த அதீத நாட்டத்திற்கு,சமணத்தின் முப்புரக் கொள்கையான காமம்,வெகுளி,மயக்கத்தை அழித்தல் என்ற செயற்பாடு, ஆசை,அனுபவித்தல் போன்ற தன்னோக்குப் பார்வைக்கு உதவியாக இல்லாததால்,கி.பி 16 க்கு பின் பின்னடைவை  சந்தித்தது.

என்றாலும் முற்றாய் அழிந்துவிடவில்லை.காத்திரமான தத்துவ,இலக்கிய செயற்பாட்டை இன்றளவும் தமிழுக்குத் தந்து கொண்டிருக்கிறது சமணம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்ற குறளின் முதற்பாட்டில் உள்ள ஆதிபகவன் என்பது கடவுள் அல்ல.
சமணத்தின் ஆதி தீர்த்தங்கரரான ஆதிநாதர் குறிப்பது.இந்த ஆதிநாதர் நிலந்தருதிருவின் பாண்டியனின் முதற்சங்கத்தில் இருந்த மதிப்புமிகு தமிழாசானும் ஆகும்.

2 comments:

  1. தற்காலத்திலும் வடார்க்காடு மாவட்ட பகுதிகளில் தமிழ் சமண மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். தமிழ் சமணம் முற்றாக அழிந்துவிடவில்லை. வைதிக மதத் தாக்கங்கள் சமணத்தில் இன்றளவும் உள்ளது, அவற்றை களைந்தால் சமணம் பகுத்தறிவு வாய்ந்த, உலகில் மதக் கலவரம் ஏற்படுத்தாத ஒரே சமயம், சமணமே.

    ReplyDelete
  2. மகிழ்ச்சி நிரஞ்சன். தமிழ்சமணத்தில் இருக்கும் வைதீக திரிபுகளை,அதனுள் இயங்கும் சமண நண்பர்கள்,சரிப்படுத்த முன் வரவேண்டும்.வைதீகத்தை எதிர்த்த கருத்துப் போராட்டமும் பொதுவெளியில் வலுவாக முன்னெடுக்கப்படவேண்டும்

    ReplyDelete