என் வீட்டின் மேல் ஒளிரும் நிலவில் அன்பின் காதலின் குளிர்மை உண்டு
என் முற்றத்தின் மேல் ஒளிரும் மஞ்சனத்தி மரங்கள் மழையின் கருணையால் பூத்துக் குலுங்குகின்றன
குணாஸ்ரீ ஞாயிறுலா போவதற்கு தன் காலணியை துடைத்துத் தரக் கேட்கிறாள்
இதே நாளின் பாலஸ்தீனத்தின் பெருநிலா ரசாயனக் குண்டுகளின் கருமையால் மறைக்கப்பட்டிருக்கிறது
என் பிரிய பூர்ணிமை முகமது தார்வீஸின் நிலம் போரச்சத்தால் துவண்டு கிடக்காது போரிடுவது அறிந்து மகிழ்வாள்
மைதானத்தில் விளையாடிய தோழர்களைக் காணாது சிறுமி தவிப்பதை படிமமாக்கி கனக்க வைக்கிறது தமிழன்பனின் தீக்கதிர் கவிதை
இந்து தமிழ்திசையில் வெளியான கவிதைகள் ஐந்தும் முகநூலில் என் வேண்டுகோளுக்குப் பிறகானதை உணர்ந்து வணங்குகிறேன்
இசுரவேலர்களின் கொடும் தாக்குதல்களால் கொல்லப்பட்ட காசாவின் குழந்தைகளில் எது தன் குழந்தை என தேடும் படங்கள் எக்ஸ் தளத்தில் கிடப்பது கண்டு துடிக்கிறேன்
மகள்களை அவர்களுக்கான பெண் சிசுக்களை கொஞ்சி வருபவன் என்பதால்
இஸ்ரேலே ஏ போர்வெறியே
உனைக் காறி உமிழ்கிறேன்
- இரா.தெ.முத்து
(ஓராண்டு முன்பு எழுதப்பட்ட கவிதை.நேற்றுதான் கண்டெடுக்க முடிந்தது.இன்று நெதன்யாகூ எனும் இஸ்ரேல் போர் வெறியன் தோற்கடிக்கப்பட்டு ஆட்சி மாற்றமும் நிகழப் போகிறது)

No comments:
Post a Comment