தீபாவளியின் கொண்டாட்ட மனநிலைக்கு , பொருள் உற்பத்தி சார்ந்த சந்தை மனோபாவம் காரணம். சமுகத்தின் வாழ்வாதார இயங்குதலிற்கு, அரசுகளின் நிலைத்தன்மைக்கு சந்தை அவசியமானது.
தீபாவளி சார்ந்த காலத்தில், உற்பத்திப் பொருட்களின் வணிக விநியோகச்சந்தை சார்ந்த பணப்புழக்கம் , தொழிலாளர்கள் தொட்டு முதலீட்டாளர்கள் வரை அவசியமானது.
ஆண்டுதோறும் வரும் , இருபதிற்கும் மேற்பட்ட மதங்கள் சார்ந்த சாராத பண்டிகைகள், மாதம் தோறுமான திருமணங்கள் , இதனை ஒட்டிய உற்பத்திகள், பணப்புழக்கம், பொருள் உற்பத்திக்கும் அதன் விற்பனைக்கும், அதை ஒட்டி வாழ்வு நடத்துவோருக்கான , வாழ்வாதார தேவைகளுக்கு அவசியமானது.அதற்கு கொண்டாட்ட மனநிலை உருவாக்கம் அவசியம்.
கொண்டாட்டமும் சந்தையுமாக பண்டிகைகள் மக்கள் முன் வருகிற பொழுது, அன்றாடங்களிலிருந்து விடுபட்டு மனம் மகிழ, மக்களுக்கும் பண்டிகைகள் அவசியம். இந்த புள்ளிகளிலிருந்துதான் கொண்டாட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.
இதனை முறைபடுத்துவதும் உதவி செய்வதும் அரசுகளின் பொறுப்பாக இருக்க வேண்டும். சமயம் சார்ந்த பண்டிகை எனில், அதில் சமயத்தின் இடம் , அரசியல் சாசனத்திற்குட்பட்ட முறைகளில் இருந்து இயங்கிட சட்ட சமுகம் மற்றும் அறிவு சமுகம் வழி காட்ட வேண்டும்.
கொண்டாட்டமே கூடாது என்பதும், யாவுமே மதம் சார்ந்தது என, அறிவு சமுகம் கொண்டாட்டங்களிலிருந்து தள்ளி நிற்பதும் , கொண்டாட்டங்களை சனநாயகப்படுத்த உதவாது.
நல்ல பார்வை
ReplyDeleteநன்றி
ReplyDeleteஅருமை
ReplyDelete