Skip to main content

Posts

Showing posts from August, 2026

மதராசப்பட்டினம்- மெட்ராஸ்- சென்னை காலங்களும் பார்வையும்

  படம்: பாரிமுனை- மெட்ராஸ் ம தராசபட்டினம் ,மெட்ராஸ்,சென்னை என்ற பெயர்கள் வெவ்வேறு காலக்கட்டம் வெவ்வேறு ஆட்சிகள் இருந்த காலத்தின் பெயர்கள். நில உடைமை பொருளாதாரம் முறையும் கிராமங்களுமாக இருந்த காலம் மதராசபட்டினம். கிராமங்கள் நகராட்சியாக இணைக்கப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரத்தின் காலம் மெட்ராஸ். நகராட்சி மாநகராட்சி பெரு மாநகராட்சியாக வளர்ந்த காலத்தில் அடையாளம் நவீன கார்ப்பரேட் காலத்தின் அடையாளம் சென்னை. பிரிட்டிஷார் வருவதற்கு முன்பே மதராசபட்டினம் உலகின் பல திசைகளிலும் இருந்து வணிகர்கள் வந்து தொழில் நடத்திய இடமாக இருந்தது . போர்த்துகீஸ் தெரு, அர்மீனியன் தெரு போன்றவை இதன் அடையாளம். மதராசபட்டினம் என்ற இயற்கை துறைமுகத்தின் வழியாக உலகத்தின் பல நாடுகளுக்கும் இங்கே இருந்து துணிமணிகள்,ஏலம்,கிராம்பு,சோம்பு போன்ற வாசனைப் பொருட்கள், மிளகு போன்றவை ஏற்றுமதி ஆகி இருக்கின்றன.மதராசப்பட்டினத்தின் பழைய துறைமுகம் பட்டினப்பாக்கம். சென்னையில் போர்த்துகீசிய மொழி நெதர்லாந்தின் டச் மொழி பிரஞ்சு மொழி பிரிட்டிஷின் ஆங்கில மொழி என்று பல மொழிகளும் கலந்து பதினான்காம் நூற்றாண்டு காலத்திலேயே multi linguistic நிலமா...