Saturday, August 22, 2026

மதராசப்பட்டினம்- மெட்ராஸ்- சென்னை காலங்களும் பார்வையும்

 

படம்: பாரிமுனை- மெட்ராஸ்

தராசபட்டினம் ,மெட்ராஸ்,சென்னை என்ற பெயர்கள் வெவ்வேறு காலக்கட்டம் வெவ்வேறு ஆட்சிகள் இருந்த காலத்தின் பெயர்கள். நில உடைமை பொருளாதாரம் முறையும் கிராமங்களுமாக இருந்த காலம் மதராசபட்டினம். கிராமங்கள் நகராட்சியாக இணைக்கப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரத்தின் காலம் மெட்ராஸ். நகராட்சி மாநகராட்சி பெரு மாநகராட்சியாக வளர்ந்த காலத்தில் அடையாளம் நவீன கார்ப்பரேட் காலத்தின் அடையாளம் சென்னை.

பிரிட்டிஷார் வருவதற்கு முன்பே மதராசபட்டினம் உலகின் பல திசைகளிலும் இருந்து வணிகர்கள் வந்து தொழில் நடத்திய இடமாக இருந்தது . போர்த்துகீஸ் தெரு, அர்மீனியன் தெரு போன்றவை இதன் அடையாளம்.

மதராசபட்டினம் என்ற இயற்கை துறைமுகத்தின் வழியாக உலகத்தின் பல நாடுகளுக்கும் இங்கே இருந்து துணிமணிகள்,ஏலம்,கிராம்பு,சோம்பு போன்ற வாசனைப் பொருட்கள், மிளகு போன்றவை ஏற்றுமதி ஆகி இருக்கின்றன.மதராசப்பட்டினத்தின் பழைய துறைமுகம் பட்டினப்பாக்கம்.

சென்னையில் போர்த்துகீசிய மொழி நெதர்லாந்தின் டச் மொழி பிரஞ்சு மொழி பிரிட்டிஷின் ஆங்கில மொழி என்று பல மொழிகளும் கலந்து பதினான்காம் நூற்றாண்டு காலத்திலேயே multi linguistic நிலமாக மதராசப்பட்டினம் மெட்ராஸ் இருந்திருக்கிறது.

சென்னையில் தெலுங்கு பேசும் மக்கள், கன்னடம் பேசும் மக்கள், மலையாளம் பேசும் மக்கள் ,இந்தி பேசும் மக்கள் என பல மொழிகள் பல மக்கள் இணைந்து  கலந்து வாழ்ந்த இடமாக நிலமாக மெட்ராஸ் அன்றும் இருந்தது; சென்னை இன்றும் இருக்கிறது .

Ethnic Diversity என்கிற பன்மைத்துவம் யார் மீதும் எவர் மீதும் வெறுப்பு காட்டாத ஒர் அன்பு ஒரு தோழமை ஒரு நேசம் காலம் காலமாக சென்னை நிலத்தில் இருந்து கொண்டே இருக்கிறது.

ஆள்வோர்கள் தொழில்முதலாளிகள் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டாலும் கூட அதையெல்லாம் சென்னை நிலத்தில் வாழ்ந்த மக்கள்  பொருட்டாகவே எடுத்துக் கொண்டது இல்லை.

(படம்: கொத்தவால்சாவடி மார்க்கெட்)

பெருநகரமாக மாறிய சென்னை , கார்ப்பரேட் பொருளாதாரக்காலத்தில் வந்தேறிகள் என்றும் பூர்வ குடிகள் என்றும் இங்கே பிரித்தாளும் வாதம் முன்வைக்கப்படுகிறது.

இந்தப் பார்வையும்  கண்ணோட்டமும் பொருளற்றவை. தொழிலாளி வர்க்க கண்ணோட்டம் இல்லாத ஆள்வோருக்கு சாதகமான என் ஜி ஓக்கள் குரலாக இருக்கிறது.

பெருநகரத்தின் பொருள் உற்பத்திக்கும் வளர்ச்சிக்கும் தடைகளாகவே  பூர்வகுடி,வந்தேறி பார்வை இருக்கின்றது.

சென்னை நிலத்தில் வாழ்கிற அனைத்து மக்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணமும் அதை நோக்கி செயல்களும் தான் பொருத்தமான செயல் உத்தியாக இருக்க முடியும்.

ஆப்பிரிக்க நிலத்தின் தோன்றிய ஆதி வேர்களாக நாம் இருப்பது உறுதிப்பட்ட காலத்தில் இத்தகைய வேறுபட்ட பிரித்தாளும் பார்வை பொருளற்றது.

அனைவருக்குமான பெருநகராக சென்னையை உருவாக்குவதே 387 வது சென்னை தினத்தின் அறைகூவலாக இருக்கட்டும்.

வெறுப்பின் கொற்றம் வீழ்க!
அன்பே அறமென எழுக!!

No comments:

Post a Comment