சிங்கிதநினைவுகள்
1972 ல் வெளிவந்த ராஜாஜியின் திக்கற்றப் பார்வதி நாவலை ஒட்டி சிங்கிதம் சீனிவாசராவ் எடுத்த திக்கற்றப் பார்வதி திரைப்படத்தின் சுவரொட்டிகளை என் பால்ய வயதில் ஆரல்வாய்மொழி சுவர்களில் பார்த்திருக்கிறேன்.
அந்த ஒரு படம் தவிர தமிழில் சிங்கிதம் எடுத்த அநேகப்படங்களை திரையரங்குகளில் பார்த்திருக்கிறேன்.
2016 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தமிழக மக்கள் ஒற்றுமை மேடையில் பல்வேறு ஆளுமைகளை கொண்டு வருவதற்கான தொடக்க முயற்சிகளில் நானும் அதன் கன்வீனர்களுள் ஒருவர் தோழர் க.உதயகுமாரும் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.
இந்த மேடையின் புரவலர்களுள் ஒருவராக ரோகிணி அவர்களை இணைக்கும் பொருட்டு அவரை சந்திப்பதற்காக வந்து கொண்டிருக்கிறோம் என்றேன்.
வாருங்கள் தோழர் என ஒரு முகவரியை அனுப்பி வைத்தார். அந்த முகவரியின் வீட்டிற்குச் சென்றோம்.
அது பிரபல இந்திய திரைப்பட ஆளுமைகளுள் ஒருவரான சிங்கிதம் சீனிவாசராவ் அவர்களின் இல்லம்.
அந்நேரம் என் மனதிற்குள் சிங்கிதம் இயக்கிய படங்கள் ஒவ்வொன்றாக மனதில் வட்டமிட்டது. அவைகள் பற்றி சிங்கிதம் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தோம்.மகிழ் ந்தார் பிரியத்திற்குரிய சிங்கிதம் அவர்கள்.
வந்த பணிகளை சொன்னோம்.புதிதாக உதயமாக இருக்கும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடைக்கு வாழ்த்துகளைச் சொன்னார்.
தோழர் ரோகிணி அவர்கள் மேடையின் பொறுப்புகளில் எந்த அளவு பயணிக்க இயலும் என தன் அய்யத்தை தெரிவித்தார்.தேவையான முன்னெடுப்பு தன் பெயரை இணைத்துக் கொள்ளலாம் என ஒப்புதல் தெரிவித்தார்.
இந்த பணியின் ஊடாக இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ் அவர்களை சந்திப்பதற்கான வாய்ப்பை உருவாக்கித் தந்தார் ரோகிணி அவர்கள்.
சிங்கிதம் மறைந்த இந்த நாளில் இந்த நினைவுகள் மேலெழுகின்றன.
தான் இயக்கிய திரைப்படங்கள் வழியாக மதிப்புமிகு இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ் நம்மோடு என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
ஆழ்ந்த அஞ்சலிகள் சிங்கிதம் அய்யா.
படம் உதவி : ரோகிணி
https://www.mathavaraj.com/p/thiratti.html?m=1
.jpg)


Comments
Post a Comment