Sunday, January 26, 2025

திரைக்கலைஞர் ரோகிணியும் விமர்சன அணுகுமுறையும்



திரைக்கலைஞர் ரோகிணி அவர்கள் தென்னிந்தியா அறிந்த ஒரு திரைக்கலைஞர்;நாடகக்கலைஞர்; திரைப்பட இயக்குநர்; கவிஞர்; பின்னணிக்குரல் கலைஞர்; களச்செயற்பாட்டாளர் இதனைத் தாண்டி இன்னொரு முகமும் ரோகிணிக்கு இருக்கிறது. அதனை இந்த வீடியோவைப் பார்க்கையில் அறிவீர்கள். 

இரா.தெ.முத்து எழுதிய பேசாப் பொருளைப் பேசிய பாரதி நூல் வெளியீடு ஜனவரி 7 , சென்னைப் புத்தகக் கண்காட்சி சிற்றரங்கில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசினார் ரோகிணி.

புத்தகத்தை முழுவதுமாக அவர் படித்த விதம் அவரது பேச்சில் வெளிப்பட்டது. புத்தகத்தின் பேசு பொருளை உள்வாங்கி , புதிய வாசகர்களை நோக்கி புத்தகத்தை கொண்டு செல்லும் தேவையை அவர் நிறைவேற்றுகிறார்.புத்தகத்தின் பேசு பொருளை ,enrich செய்யும் முறைமையில் ஆய்வு நோக்கில் சில புதிய கருத்துகளை முன் வைத்து, புத்தகத்தின் ஆய்வை அடர்த்தியாக மாற்றிக் காட்டுகிறார்.

இந்த approach இந்த அணுகுமுறையே சமகாலத்திய தமிழ் இலக்கிய விமர்சன கோட்பாட்டு முறைக்குத் தேவை.

இதோடு படைப்பாளி குறித்த தனது தோழமை கொண்ட பார்வையை முன் வைக்கிறார்.

பத்து நிமிட உரையை ரோகிணி உரையைக் கேளுங்கள்.ஒரு புத்தகத்தை எவ்விதம் அணுக வேண்டும் என்கிற ஒரு பார்வை கிடைக்கும்.

நன்றி தோழர் ரோகிணி.நன்றி பாரதி புத்தகாலயம். நன்றி BHARATHI TV

No comments:

Post a Comment