காவிரி


மண்ணில்
மனதில்
பால் வார்ப்பவள் நீ

உன் திருமுன்
காதல் கனிகிறது

உன்னால்
எம் பயிர்
தழைக்கிறது
எம் உயிர்
வளர்கிறது

எம் கலை
இசை
எழுத்திற்க்கு
தாய்ப்பால் நீ

நீ நடந்தால்
நடப்போம்
கிடந்தால்
கிடப்போம்

நீ வந்தால்
வனப்போம்
பொய்த்தால்
உயிர் துறப்பொம்

எம்
பாவிரி
எம்
வாழ்விரி
எம்
யாழ்விரி
எம்
ஞானவரி
எம்
மாவிரி
எம்
காவிரி
உன்னை சரண் அடைந்தோம்!

Comments

  1. எம் கலை இசைக்கு தாய்ப்பால் நீ
    அருமையான வரிகள்
    தொடர்ந்து இயங்குங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular Posts