இணைந்த இதயம்

Monday, August 8, 2011

சுறுக்கு கயிறு


ஆறு வயது கடைக்குட்டியான ரகுவுக்கு நாய் வளர்க்கும் ஆசை வந்திருந்தது.நாயை பராமரிப்பதில் உள்ள சிரமங்கள்,ஏற்கனவே வளர்த்த வீட்டு நாய் சிந்துவை கடித்து அதனால் அவள் வயிற்றைச் சுற்றி போட்ட பதிணாலு ஊசி அனுபவங்கள் எல்லாம் சொன்ன பிறகும்,அவன் இனங்காமல் நாயின் மீதான அடத்தை வளர்த்து ,சாப்பிடாமல் இருப்பது தொடரவே அம்பாசமுத்திரத்திலிருந்து அரிசி வந்த லோடு லாரியில், சிவந்த ராஜபாளையம்  நாய் குட்டி ஒன்றை வாங்கி அதற்கான மரக் கூண்டு தயாரித்து,அதில் வைத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார் மாமா.        நாய்குட்டி வந்ததிலிருந்து அதற்க்கு கிண்ணத்தில்  சோறு வைப்பதும்,பால் ஊற்றுவதும்,அவ்வப்போது நாய் சோப்பால் குளுப்பாட்டி விடுவதுமாக சந்தோசத்தில் இருந்து வந்தான்.போக போக நாய் குட்டி ,கூடம்,படுக்கை அறை,சமையல் அறைகளில் ஆய் போவதும்,மூத்திரம் போவதுமாக இருக்கவே,வீட்டு பெண்களுக்கு உள்ள  வேலைகளோடு,அதை பராமரிப்பதில் சலிப்பும் அசூயையும் சேரவே ,ரகுவுக்கும் நாயை வளர்ப்பதில் நேர்ந்த சிரமங்கள் புரிய ஆரம்பித்தது. 
போததென்று அவனோடு படுக்கையில் உறங்குவதும்,அவன் உடம்பை நக்குவதுமாக அதன் தொல்லை நீளவே ,பக்கத்து வீடுகளில் நாயை கொடுத்து விடலாமா எனக் கேட்டுப் பார்த்தும் யாரும் நாயை வாங்க ஒப்பவில்லை. கடைசியில் ஸ்கூட்டரில் நாயைக் கொண்டு போய்
தொலைவாய் மாதவரத்தில் விட்டு விடுவதென முடிவானது.
இனிமேல் நாயினால் தொல்லைகளோ,வசதி குறைவோ  இருக்காது என நம்பி இருக்கையில்
ஒரு நாள் வீட்டு வாசல் வெளியே நாய் குறைக்கும் சத்தம் கேட்கவே ,மேல் மாடியிலுருந்து
கீழே பார்க்கயில்  மாதவரத்தில் விட்டு வந்த அதே நாய் வாலாட்டிக் கொண்டிருந்தது.சில நாள் அதனை விரட்டுவதும் திரும்பி அது வருவதுமாக இருக்கவே , வட்ட மாநகராட்சி அலுவலகத்திற்க்கு போன் செய்து நாயை பிடித்து போக சொல்லப் பட்டது.
ஒரு நாள்  மேற்கிலிருந்து  வந்த நீலநிற மாநகராட்சி வேன்  வீட்டு முன்பு சரக்கென்று பிரேக் போட்டு நிற்க அதிலிருந்து இறங்கிய  ஊழியர்கள் இங்கு அங்குமாக நாயை தேட வீட்டின் கீழ்பக்க
காம்பவுண்டிலிருந்து வெளியேறிய நாயின் கழுத்தை நோக்கி சுருக்கு கயிறு வீசப்பட அது வீட்டின் உள்பக்கமாக ஒட முயன்ற தருணத்தில்,சுருக்கு மேலும் கழுத்தை இருக்க ,அதன் பார்வைகள் மேலேறி,வேகமாய் வெளிப்பட்ட ஊளைச் சத்தம்  சன்ன சன்னமாய் குறைந்து கொண்டே வர ,ஆசை ஆசையாய் வாங்கி வந்த ராஜபாளையம் நாயை வண்டியின் உள்பக்கமாய் தூக்கி எறிய ,ஏனைய நாய்களின் ஊளைச் சத்தத்தோடு நீல நிற வேன் சீறிச் சென்றது

No comments:

Post a Comment