இணைந்த இதயம்

Monday, August 8, 2011

சூதாட்டக்களம்


அகமும் புறமும்
கறை படிந்தவர்களுக்கு
லாபம் கொழிக்கும் தொழிலென
அரசியலைக் கண்டவர்களுக்கு
குடிமக்களைப் பற்றியும்
நாடாளுமன்றம்,நீதிமன்றம் பற்றியும்
கவலை  என்ன?

அரசியல் பரிசுத்தம் ஆக வேண்டுமெனில்
படித்தவர்கள் வரவேண்டும் என்றார்கள்
வந்தனர் கல்வியாளர்,விஞ்ஞானி.பொருளாதார மேதைகள்.

நீதிதேவதை விழித்திருக்க
அநீதிகள் செய்கிறார்கள்
ராசாக்கள்
செங்கோலை கள்ளக் கோலாக்குகிறார்கள்
காந்திகள்
நாடாளுமன்றத்தை கார்ப்பரேட்டுகளின்
சூதாட்டக் களமாக்குகிறார்கள்
டாட்டா,அம்பானிகள்
தப்பித்தலை முன்னிறுத்தி
சாதி அரசியலை முன்னெடுக்கிறார்கள்
உடன்பிறப்புகள்.

இவர்களின் பாவத்தை
இனியும் ஏற்காது
புண்ணிய நதிகள்
வாய்மை ஒருபோதும்
வெல்லாது தன்னந்தனியே.

தேசமும் நீதியும் காப்பாற்றப்பட
திரளுக தேசமே
ஏந்துக கோபத்தீயை
மூளட்டும்  மூன்றாம் விடுதலைப் போர்

  1. தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

No comments:

Post a Comment