Sunday, November 11, 2012

இப்பொழுதெல்லாம் தீபாவளி







ஜெயபாரத்தின் வீட்டுத் திண்ணையில்
 வடிவமைக்கப்பட்ட மாட்டுத் தொழுவத்தில்
 குழந்தை ஏசுவை பார்க்கப் போனதில்
ஒரு துண்டு கேக் கிடைத்ததால்
கிறிஸ்துமஸ் பிடித்துப் போனது

சித்திரை மாதத்தில் அந்த பத்து நாட்களும்
சித்தப்பாவின் நண்பர் டேவிட் வீட்டில்
அச்சு முறுக்கோடு ஜிப்சிலின் தரிசனமும்
கிடைத்ததால் அன்னை வேளாங்கன்னியின்
சப்பரத் திருநாளும் பிடித்துப் போனது

ஒத்தவீட்டு பக்கீர்முகமதுவின் உயர்ந்த கட்டு
வீட்டிற்குப்  போய் அவன் உம்மா கையால்
ஆட்டிறைச்சி குழம்போடு  வெள்ளை வெளேர்
 இட்டிலி சாப்பிடக் கிடைத்ததில்
பக்ரீத் பண்டிகையும் பிடித்துப் போனது

மணிக்கடையில் வாங்கிய ஓலைப் பட்டாசை
வெடிக்கும் ஆசையிலும் உருளைக் கிழங்கும்
உள்ளியும் கலந்து அம்மா வைக்கும்
குழம்புச் சோற்றோடு  சினிமா பார்க்க
நாலணா கிடைப்பதால் தீபாவளி பிடித்துப் போனது

திருமணம் மகள் என்றான புதிய சூழலில்
அவளுக்கான கவுன் அவளுக்கான மத்தாப்பு
அவளுக்கான இனிப்பு என்று வாங்கத் தொடங்கி 
இப்பொழுதெல்லாம் களை கட்டத்
தொடங்கி விடுகிறது தீபாவளி.

(நன்றி:தீக்கதிர் வண்ணக்கதிர் 2012 நவம்பர் 11)

4 comments:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    என் மனம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி திரு.மகேந்திரன்.உங்களுக்கும் உங்கள் குடும்பம்,நட்பு வட்டத்திற்கும் இனிய தீப ஒளி வாழ்த்துகள்

      Delete
  2. இனிய நினைவுகளைச் சொன்னவிதம் மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாசிப்பு மகிழ்ச்சி தருகிறது.உங்களுக்கும் உங்கள் இனிய குடும்பம் நட்பு குடும்பம் அனைவருக்கும் மனம் கனிந்த தீபஒளி வாழ்த்துகள்.நன்றி திரு.ரமணி

      Delete