இணைந்த இதயம்

Thursday, August 23, 2012

அர்த்தம்
பேராசிரிய நண்பரொருவர் ஒரு இதழில் வெளியிட என்னிடம் எளிமையான கவிதை வேண்டுமென்று கேட்க,நானும் எழுதி அனுப்ப,அவர் கவிதை ரொம்பவே எளிமையா இருக்குதே என்றார்.இதை என் மகளுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தேன்.அவள் படித்து சொன்ன கமெண்ட் இது:

Elimaiyana nadaiyil alagiya artham adangi iruku pa.
Nandru..
ungal Ammu kutty

அந்தக் கவிதை: 
அர்த்தம்
######
அறிவின்
அர்த்தம்
பகுத்தல்

சிந்தனை
அர்த்தம்
மாற்றம்

மானுட
அர்த்தம்
அன்பு

சிறகின்
அர்த்தம்
பறத்தல்

செயலின்
அர்த்தம்
விடுதலை

தேசத்தின்
அர்த்தம்
கூட்டாட்சி

விடுதலை
அர்த்தம்
யாவரும்
இன்புற்றிருத்தல்

2 comments:

  1. அருமையான கவிதை. அழகான விமர்சனம் .. :)

    ReplyDelete
  2. மகிழ்ச்சி இக்பால்செல்வன்;எப்படி அருமை என்று சொன்னால் பயன்பாடாய் இருக்கும்

    ReplyDelete