தொடர் பணிகளால் பல மாதங்களுக்குப் பிறகு தமிழ் சினிமா பார்த்தேன்;அது
நண்பன்.மதியம் இரண்டே முக்கால் காட்சிக்கு சென்னை பெரம்பூர் பிருந்தா வாசலில்
டிக்கெட் வாங்கி விட்டு காத்திருந்தேன்.நான்கைந்து கல்லூரி மாணவர்கள் மாணவிகளோடு
காதலாடிக் கொண்டிருந்தார்கள்.அவர்களின் கலாய்ப்பு , மொழி,உடை,பாவனைகளை
பார்த்திருக்கையில் மணி அடிக்கப்பட்டு
திரையரங்கம் உள் சென்ற சில நிமிடங்களில் பப் பப் பப்பரப்பா என்ற ஒலியோடு ஜெமினி
நிறுவனத்தின் வர்த்தக முத்திரையோடு படம் தொடங்கிய கொஞ்சம் நேரத்திலேயே அதனோடு
ஒன்றிப் போக முடிந்தது.
கதைதான் காரணம். .கல்வி கற்றுக் கொள்தலில் மாணவர்களின் சொந்த தேடலை,கற்பனையை
கவனத்தில் கொள்ளாத கரடு தட்டிப் போன ஒர்
எஞ்னியரிங் கல்லூரி. மதிப்பெண் வாங்கும் பொருட்டு மனப்பாடம் செய்யும் முறை,புத்தகத்தை
உருப்போட்டு களிமண்ணாக வார்க்கும் ஆசிரியர்கள்,பாடத்திற்கு வெளியே மாணவ்ர்கள்
செல்லாமல் தடுப்பதற்காக நிர்வாகம் போட்டு
விடும் படுதா என கதை சமகாலத்தின் கல்விச் சூழலை விமர்சிக்கத் தொடங்க நமக்கு ஆர்வம் கூடி விடுகிறது.
காதல்,கல்யாணம்,குறித்த விமர்சனப் பார்வைகள் ,நண்பர்களின் குடும்ப துயரம்,
அதில் பங்கு கொள்வது ,அதற்கான உதவிகள் செய்வது என படம் ஆக்கப்பூர்வமான
பங்களிப்பைச் செய்கிறது.எங்கேயும் இந்த காட்சிகள் செயற்கையாக துருத்திக் கொண்டு
இல்லாமல் இயல்பான ஒட்டத்தில்,கலகலப்பான காமெடிகளோடு படம் ஆக்கப்பட்டிருப்பது ப்ளஸ் பாய்ண்ட்.
ஒரே சிஸ்டத்தில் கேள்விகள் கேட்டு பயணப்படுகிற ஒரு பிரிவு:எந்த கேள்விகளும்
அற்று சிஸ்டத்தின் பின் செல்கிற இன்னொரு பிரிவு என இருவகையான சிந்தனை ஓட்டத்தை
பதிவு செய்கிறது படம்.இரு பிரிவினரின் முரண்பாடுகளை காட்சி படுத்தி இருக்கும் படம் ,கேள்விகள்
கேட்கும் பிரிவு சந்திக்கும் சிஸ்டத்தின் நெருக்கடிகளை காட்சிப் படுத்தி
இருக்கலாம். இறுதியில் இரு பிரிவும் சார்ந்து வாழக்கூடிய சனநாயகத்தன்மையோடு
சிஸ்டத்தின் தன்மை இருப்பதாக உணர்த்தி படம் முடிகிறது.
தொடக்கம் முதல் இறுதி வரை எங்கேயும் சிக்கல் இல்லாமல் படம் செல்கிறது.காட்சிகள்,ஒளி,இசை,நடிப்பு
அனைத்திலும் ஒரு ப்ரக்ஷ் லுக்கை பார்க்க முடிகிறது.படத்தின் ஹீரோ விஜய்
நண்பர்ளிடம் உதை வாங்குவதை இளைய தளபதியின் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருப்பது
ஆரோக்கிய ரசனையின் தொடக்கம்.மூன்று ஹீரோக்கள் இணைந்து நடித்திருக்கும் படம்
அடுத்தடுத்த நல்ல படங்களுக்கு பாதை அமைக்கட்டும்
சங்கர் படம் அத்தனையும் பார்த்த ரசிகன்,ஒரு கவிஞன் என்ற நோக்கில் எனக்கு பிடித்த
சங்கரின் இரண்டாவது படம் (சில விமர்சனம் இருந்தாலும்) நண்பன்.முதல் படம் இந்தியன்.
நான் அதிகமாக திரைப்படம் பார்ப்பதில்லை.உங்களின் இந்த விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது...பார்த்துவிட்டு எனது விமர்சனத்தையும் பதிகிறேன்...
ReplyDeleteசரி அப்படியே ஆகட்டும் மது.வருகைக்கு மகிழ்ச்சி
ReplyDelete