Thursday, May 27, 2021

புதுப்பேட்டை 15 ஆவது ஆண்டு நிறைவு


தனுஷின் 9ஆவது படமான புதுப்பேட்டை படத்திற்கு இது 15 ஆவது ஆண்டுதனுஷ் திரைப்படத்துறைக்கு வந்து இருபதாவது ஆண்டு.20 ஆண்டுகளில் 45 படங்கள் நடித்திருக்கிறார்.நான் 35 படங்களுக்கும் மேல் பார்த்திருக்கிறேன் . வடசென்னையை நான்கு முறை பார்த்திருக்கிறேன்.அசுரனை இரண்டு முறைகளும் கர்ணனை தியேட்டரில் ஒரு முறையும் அமேசான் ப்ரைமில்  இருமுறையும் பார்த்ததை சேர்த்தால் 44 காட்சிகள் பார்த்திருக்கிறேன்.துள்ளுவதோ இளமை ,காதல் கொண்டேன், திருடா திருடி இவைகளிலிருந்து மாறுபட்ட தோற்றமும் நடிப்பும் தனுஷால் காட்டப்பட்ட படம் புதுப்பேட்டை.கதாபாத்திரங்களை தேர்வு செய்கிற ஆழ்ந்த கவனத்தால் 20 ஆண்டுகளாக தமிழ்த் திரையில் வெற்றிகரமான கதாநாயகனாக தனுஷ் இருப்பது மகிழ்ச்சி.இரண்டு முறை நடிப்பிற்காக தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார் தனுஷ்.புதுப்பேட்டையை பொருத்தவரை கூவம் ஓடுகிற காய்லான் கடை உதிரிப்பாகங்கள் கொண்ட நிலம் மயங்கித் திரிந்து பொதுவான சென்னை என்பதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கொக்கி குமார் கேங்ஸ்டராக மாறி வந்ததற்கான பின்னணி அத்துணை இயல்பானதாக இல்லை.கழகங்களுக்கிடையிலான வன்முறை அரசியலை பின்னணியாகக் கொண்டது படம் என்பதை புரிய வைக்கிறார் செல்வராகவன்.நிலமோ பின்னணியோ புதுப்பேட்டை படத்திற்கு அவசியமில்லை .தனுஷூற்கு திரை உலகில் அழுத்தமாக நிற்பதற்கான ஒரு பாத்திரம்  படம் தேவை.பாத்திரத்திற்கு ஏற்ற தேவைக்கேற்ற படமாக  புதுப்பேட்டை  வார்க்க ப்பட்டிருக்கிறது. கோபம் ,ஆவேசம் ,குழந்தைத்தனம் காதல்,  பாசம் , சோகம் போன்ற போன்ற உணர்ச்சிகளுக்கு  தனுஷ் என்கிற கொக்கி குமார் பொருந்திப் போகிறார்.கொக்கி குமாருடைய நாயகிகளாக வேணி என்கிற சினேகாவும் செல்வி என்கிற சோனியா அகர்வாலும்ஆளுமை கொண்ட , நினைவில் நிற்கும் பாத்திரங்களாகவே வார்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி.நடிப்பு , ஒளிப்பதிவு ,இசை ,இயக்கம் அனைத்தும் கச்சிதமாக புதுப்பேட்டையில் கையாளப்பட்டிருக்கிறது.புதுப்பேட்டையில் ஒரு துண்டு பாத்திரத்தில் தொடக்கத்தில்நடித்திருந்த விஜய்சேதுபதியின் வளர்ச்சி  அடுத்த 20 ஆண்டுகளாக  நமக்கு பிரமிப்பை தருகிறது.20 ஆண்டுகளில் தனுஷ், விஜய் சேதுபதி தமிழ்த் திரை உலகில் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கிறார்கள். செல்வராகவன் ,யுவன் ஷங்கர் ராஜா தொடர்ச்சியாக தமிழ்த் திரை உலகில் பயணப்பட்டு இருக்கவேண்டும் என்கிற கவலையும் புதுப்பேட்டை வழியாக நமக்கு எழுகிறது. நடிப்புக்கலைஞனாக தனுஷுக்கு புதுப்பேட்டை மாறுபட்ட  திரைப்படம்.படத்தில் பங்கு கொண்ட அத்துனை கலைஞர்களை வாழ்த்துகிறேன்.தயாரிப்பாளர் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துகள்.

No comments:

Post a Comment