Friday, May 18, 2012

மாவோயிஸ்டுகளுக்கு திறந்திருக்கும் கதவுகள்




தோழர் இந்திரா காந்தி அலங்காரம் மொழி பெயர்த்த ரெட் சன் -நக்சல் பகுதிகளில் ஒரு பயணம் வாசித்துக் கொண்டிருந்தேன். நேபாளில்.பனிரெண்டு ஆண்டு காலம் நீடித்த போர்,அதிகாரத்தை,பாராளுமன்றத்தை மாவோயிஸ்ட் கரங்களில் தருகிற போது ,எழுகிற நீடிக்கிற சிக்கல் அதன் படிப்பினைகள்,இந்திய நகசல்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.


மாவோயிஸ்டுகளுக்கு அறுதிப் பெறும்பான்மை கிடைக்காத சூழலில்,எதிர் வர்க்கமான நேபாள காங்கிரசும் அரசில் பங்கு பெறுகிற பொழுது,நாடாளுமன்றத்தை புரட்சி வாதிகள் எப்படி கையாளுவது என்ற புதிய சூழலில் தன் பக்கமும்,எதிர் பக்கமும் சந்தேகத்தை சம்பாதிக்கின்றனர் மாவோயிஸ்டுகள்.

பொது வெளி அரசியல் இல்லாத போது ,கூட்டணி அல்லது முன்னணி  இல்லாத போது முடிவு எடுப்பதும் அதை ஏற்கச் செய்வதும் எளிது.நாடாளும்ன்றம்,அரசமைப்பு மன்றம் ஊடாக ஒரு முன்னணி ஊடாக எட்டப்பட வேண்டிய தீர்விற்கு விட்டுக் கொடுப்பதும்,நெளிவு சுளிவான நெகிழ்ச்சியும் தேவை என்று நேபாள தோழர்கள் புரிந்து கொண்டு செயல்பட தலைப்பட்டிருக்கிறார்கள்.

இந்திய சூழலில் அழித்தொழிப்பு,கடத்தல்,விடுவிக்க கோரிக்கை,மார்க்சிஸ்ட்,கம்யூனிஸ்ட்களை வர்க்க விரோதியாகப் பார்த்தல்,எதிர் வர்க்கத்த்தோடு கைகோர்த்தல் என்பதெல்லாம் செல்ல வேண்டிய பாதை,அமைக்க வேண்டிய உத்தி,யார் பகைவர்கள்?யார் நண்பர்கள்? என்கிற குழப்பம் இந்திய மாவோயிஸ்டுகளை பலவீனப் படுத்தி உள்ளது

.கடத்தல்,விடுவித்தல் வழி சரிந்து போன இமெஜை தூக்கி நிறுத்தப் பார்க்கிறார்கள்.தேவை இந்திய ஆளும் வர்க்கத்திற்கு மாற்றாக ,பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் விவசாயிகள்,பெண்கள்,வட்டார தொழில் முனைவோர்,சிறு குறு தொழில் அதிபர்கள்,கைவினைஞர்கள்,மத்திய தர மக்கள்,அறிவாளிகள்,கலைஞர்கள்,தலித்,பழங்குடி மக்கள்அணி இணைவிலான ஒரு பரந்து பட்ட முன்னணி-மக்கள் ஜனநாயக முன்னணியே இன்றைய தேவை.

 இந்திய மாவோயிஸ்டுகள் நிலைமை உணர்ந்து,தங்கள் உத்தியை மேம்படுத்த வேண்டும் என்பதே எதிர் வெளியீடாகவும்,சுதீப் சக்ரவர்த்தியின் ஒரிஜினல் நூலாகவும் வந்திருக்கிற இந்நூல் வழி நாம் பெறுகிற வழியாக இருக்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சி ஒரு பரந்துபட்ட இடதுசாரிகள் ,அம்பேத்கரிஸ்டுகள்,பெரியாரிஸ்டுகள்,தலித் அமைப்புகள் இணைந்த ஒரு அணியை கட்ட முயற்சிக்கிறது.அக்கறை கொண்ட மாவோயிஸ் டுகளுக்கு கதவுகள் திறந்தே இருக்கின்றன.

No comments:

Post a Comment