Tuesday, April 17, 2012

கோபம்










மீசை மட்டுமா
ஆண்களுக்கு அழகு?
கோபம் கொள்தல்
அதனினும் அழகு

மெட்டி பார்த்து
நடப்பதா பெண்களுக்கு அழகு?
எட்டி மிதித்து
நடப்பதே பேரழகு

குழந்தைகள் மீதும்
குடும்பத்தார் மீதும்
அக்கம் பக்க நட்புகள் மீதும்
கொள்வதா கோபம்?

எங்கே செலுத்த வேண்டுமோ
அங்கே செலுத்தவும்
எங்கே மீட்க வேண்டுமோ
அங்கே மீட்டுக் கொள்ளவும்
தெரிந்திருக்க வேண்டும் கோபத்தை

வெற்று ஆசைகளுக்கோ
சுயநலத்திற்கோ
குவார்ட்டர் கட்டிங்களுக்கோ
கொள்வதா கோபம்

கோபம்
பெருங்காட்டு தீ
கொதித்தெழும் எரிமலை
சுருட்டிக் கொள்ளும் சுனாமி

குப்பை அள்ளவில்லையா
கோபம் கொள்ளுங்கள்
ரேசன் கடைகளில்
பொருட்கள் இல்லையா
கோபம் கொள்ளுங்கள்
வேலை இடங்களில்
கூலி இல்லையா
கோபம் கொள்ளுங்கள்

இது கோபத்தின் சிறு பொறி

பெருந்தீ எது?

அறம் சார்ந்த கோபம்
அரசியல் காக்கும் கோபம்
உள்ளூர் முதல் உலகம் வரை
 அநீதி எதிர்த்த கோபம்

குடிகளுக்கு ஆதரவாய்
கோடிகளை எதிர்த்த கோபம்
பெண்மை மீது படரும்
சூழ்கலி அழிக்கும் கோபம்

நெய்தல் முல்லை பாலையாக்கப்பட்ட
பாழாட்சி எதிர்க்கும்
அண்டம் அதிரும் கோபம்

விலையில்லா பொருட்கள் கொடுத்து
சுயமரியாதை வாழ்வை பறிக்கும்
வரலாற்றுப் பிழையான வைதீக
கோட்டைகளை தகர்க்கும் கோபம்

குடி மீது கொடும் வரி போடும்
ஒரு சதத்திற்காய்
தொண்ணூற்று ஒன்பது சதத்தை
வெட்டி வீழ்த்தும் 
கொத்தளங்களை சாய்க்கும் கோபம்

நமது கோபத்தில்
சுயநலம் இல்லை
பேராசை இல்லை
அநீதி இல்லை
என்பதனால்
நமது கோபம் நியாயம்
நமது போராட்டம் நியாயம்
நமது தர்க்கம் நியாயம்
நமது ஆவேசம் நியாயம் நியாயம்

2 comments:

  1. வணக்கம் தோழர். கோபம் கொள் மகனே என்கிறீர்கள்.அநீதி கண்டு கொதித்தெழும் கோபம் வேண்டும் என்றும்.கோபம் நமமை செழுமைப்படுத்த்வும் செய்யும். வாழ்த்துகள்.

    //நெய்தல் முல்லை பாலையாக்கப்பட்ட
    பாழாட்சி எதிர்க்கும்
    அண்டம் அதிரும் கோபம்

    விலையில்லா பொருட்கள் கொடுத்து
    சுயமரியாதை வாழ்வை பறிக்கும்
    வரலாற்றுப் பிழையான வைதீக
    கோட்டைகளை தகர்க்கும் கோபம்//

    ReplyDelete
  2. மகிழ்ச்சி அருணன் பாரதி;உங்கள் வாழ்த்து உற்சாகம் தருகிறது

    ReplyDelete