இணைந்த இதயம்

Saturday, September 3, 2011

ஆகும் அறம்

இது
எந்தத் தூளியிலிருந்து
அவிழ்க்கப்பட்ட சேலை?

எந்த குழந்தைக்காக
முலைப்பால் சுரந்திருந்த சேலை?

எந்த பூம்பெண்ணின்
உடல் காத்திருந்த சேலை?

யாரின் கண்ணீர் சுவடுகள்
படிந்திருந்த சேலை?

யாரின் சித்தம் துறந்திருந்த சேலை?

எந்த பங்களா ருசிக்காக
குதறப்பட்ட சேலை?

எந்த லத்திக் குறிகளால்
புணரப்பட்ட சேலை?

சக
 உயிர்
நட்பு
மனிதம் என
பாராமல்

காமம் வனைந்து
வளைய வரும் குழியென
பெண்ணைப் பார்க்கும்
பொதுப்புத்தியை
தீயிட்டு அழித்தல்
ஆகும் அறம்.


2 comments:

  1. அறச்சீற்றம் வெல்க.
    -அ. குமரேசன்

    ReplyDelete
  2. உங்கள் கவனிப்பு மகிழ்ச்சி தருகிறது அ.கு;

    ReplyDelete