இணைந்த இதயம்

Tuesday, August 9, 2011

ஈழம் யாரின் கோரிக்கை?


நண்பர் கார்டூனிஸ்ட் பாலாவின் முகனூலில் ஈழம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியை வன்பகடி செய்து செய்தி போட்டிருக்கிறார்.எல்லோருக்குமான கருத்து உரிமை அவருக்கும் இருக்கிறது.முன் முடிவு சார்ந்தும்,ஒவ்வாமை சார்ந்தும் இழிவு செய்வது கருத்து உரிமை அல்ல.இழிவு செய்ய முனைந்தால் உண்மை தெரிய வ்ராது.ஆய்வோ,விவாதமோ தரவுகள் சார்ந்து நடைபெற வேண்டும்

இலங்கைத் தமிழர் மொழிக்கும்,வாழ்விற்க்கும் பாதுகாப்பு,வாழ்வுரிமை அவசியம் என்ற முழக்கம் உலக்ளாவிய முறையில் எழுந்து வருகிற சூழல்.மனசாட்சி உள்ளோர் ஐ.நா சபை அமெரிக்க வாலாக நீளாமல் ,குற்றவாளி ராசபக்சேவை தண்டிக்க வேண்டும் என குமுறுகிறார்கள்.

வடக்கு,கிழக்கு பகுதியில் பொருளாதார வலுவற்ற எளியத் தமிழர்கள் ,போர் முடிந்த சூழலிலும் ,தத்தம் வீடுகளுக்கு,சொந்த நிலங்களுக்கு திரும்ப முடியாத ஆபத்து தொடர்கிறது.தமிழர் பகுதியில்,போலியான சிங்கள ஆதாரங்களை நிறுவ முயல்கிறார்கள்.தமிழர் பகுதி எங்கும் ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

இப்பொது அவர்களுக்கு உடனடி தேவை ,சொந்த ஊர்களுக்கு திரும்புதலும்,சொந்த சொத்துகளை கை கொள்தலுமாகும்.மீள அவர்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதும் ஆகும்.

சொந்த வீடுகள்,சொந்த நிலங்களை இழந்து விட்டு ,நாளைய ஈழத்தை அவர்கள் எப்படிஎதிர்பார்க்க இயலும்?புலம் பெயர்ந்த,  படித்த ,தொழில்நுட்ப மத்தியத்ர தமிழர்களுக்கு எளிய தமிழர்களின் வலி புரியாது.படித்த தமிழர்கள்,கணினி முன் உட்கார்ந்து கொண்டு,பீசா சாப்பிட்டு கொண்டு,சோக்கு,சல்சாக்களை செய்து கொண்டு,ஈழம் பற்றி பேசிக் கொண்டடிருக்கிறார்கள்.போராளிகளை நான் சொல்லவில்லை.மாறுபாடு இருந்தாலும் அவர்களின் உயிர்தத்ததிற்க்கு வீர வணக்கம்.

ஆங்கிலேயர் காலத்திலும் புதிதாய் படித்து வந்த மேல்தட்டு தமிழர்கள் வேலைவாய்ப்பில்,முன்னிலை பெற ஆங்கிலேயர்களுக்கு ஏவல் செய்தார்கள்.புதிய சூழலில் தனக்கான இடத்தை தக்க வைக்க புதிய ,பணக்காரத் தமிழர்கள் தகிடுதத்தம் செய்கிறார்கள்.

.பலம் பொருந்திய நாட்டை உடைத்து புதிய காலணியச் சூழலை ஏகாதிபத்தியம் உருவாக்குகிறது.அடையாள அரசியலை இதற்க்கு பயன்படுகிறது.தேசத்தை உடைக்க இனம்,மொழி என்பார்கள்.அந்த பணி முடிந்த பின்பு அதே நுட்பத்தை பயன்படுத்தி,வட்டார,மாநில,சாதிய பிரிவினையையையும் கோருவார்கள்.இந்த உலகச்சூழலை ,ஏகாதிபத்திய நாடுகளின் சூழ்ச்சியை மறக்க கூடாது.

தமிழகத்தை பிரிக்க வேண்டுமென எழுந்த கோரிக்கை யாருடையது?தனி தெலுங்கானா யாரின் முழக்கம்? கஞ்சிக்கில்லாத ஏழைகளின் முழக்கமா?ஈழமும் ஏதுமில்லாத எளிய மக்களின் கோரிக்கையா?.ஒன்றுபட்ட தேச பொருளாதார போட்டியில் ,அதிக உபரியை பெற முடியாதவர்களின் நுட்ப பொருளாதார,பண்பாட்டு அரசியல்.

சமபலமற்ற உலகச்சூழலில் ,தனிநாடு முழக்கம் மெய்யான போராட்டம் சார்ந்த மக்களுக்கோ,அந்த இயக்கத்திற்க்கோ உதவாது.இம்மாதிரியான போராட்டத்தை தூண்டிவிட்டு இறுதியில் ஆதாயம் அடைவது முதலாளிகளும்,ஒட்டுண்ணிகளும் தான்.

ஒரு தேசத்திற்க்குள் பொருளாதர,பண்பாட்டு சமமின்மை,நீடிப்பதற்க்கு ஆட்சியாளர்களின் கவனமின்மை மட்டுமல்ல;அசமத்துவத்தை ப்ராமரிக்கும் தனியுடைமை அமைப்பு காரணம்.பாதிக்கப்படுகின்ற தமிழர்களுக்கு இப்போதைய தேவை:போரில் அனைத்தும் இழந்தவர்களின் வாழ்விடங்களை மீளத் தருவதும்;உடனடி தொழில் மீட்பிற்க்கான கடன் உத்வியுமாகும்.

இதை ஏதும் பேசாமல் ஈழ,ஈழம் என தவளைக் கூச்சல் போடுவதன் மூலம் ,கார்டூனிஸ்ட் பாலா போன்றவர்கள்,உள்ளூரில் வாழ்விடமற்ற ,நிலமற்ற,ஆலயங்களுக்குள் நுழைய முடியாத,சமச்சீர் கல்வியை பெற இயலாத எளிய மக்களுக்கு விரோதமான தமிழ் முதலாளிகளின் பார்வையை முன்னெடுக்கிறார்.அது அவரின் விருப்பம்;இருக்கட்டும்.அதற்காக மார்க்ஸிஸ்ட்டுகள் மீது சேற்றை விசுவது எந்த ஊர் நியாயம்?

கொலை வாளினை எடுடா;மிகு கொடியோர் செயல் அறவே
 பாவேந்தர் பாரதிதாசன்

No comments:

Post a Comment