இணைந்த இதயம்

Sunday, October 17, 2010

அதிகார மையமும் படைப்பாளிகளும்சில வாரங்களுக்கு முன்பான ஆனந்தவிகடனில் (2010 அக்டோபர்)அதிகார மையத்தை கேள்விக்குள்ளாக்கும் படைப்பாளிகள் தமிழில் இல்லை என கவிஞர் இளம்பிறை சொல்லி இருந்தார்.நான் அவரிடம் பேசும் போது அவ்வாறான ஆளுமைகள் நம்மிலும் உண்டு;அவர்களுக்கான அறிமுகம்தான் பரவலாக இல்லை என சொன்னேன்.

அதே நேரம் இளம்பிறை சொன்னதில் ஓர் அர்த்தம் உண்டு.வாழும் காலத்தில் பல ஆளுமைகள்,படைப்பாளிகள் அநீதிக்கெதிராக சிறு முனகலும் இல்லாமல் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள்.அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமென நடைபெற்ற  நீள 60 ஆண்டு வழக்கில் வந்தது தீர்ப்பல்ல;கட்டைப் பஞ்சாயத்து
முடிவென  உலக்குச் சொல்ல இவர்களுக்கு தடையாய் இருப்பது எது?

கவிப்பேரரசு,கவிக்கோ,கவிச்சக்ரவர்த்தி என அடைமொழி கொண்டவர்களோ அல்லது ஊடகத்தில் முகவரி பெற்றவர்களோ எந்த எதிர்ப்பும் சொல்லாமல் கழுவும் மீனில் நழுவும் மீனென இருந்து கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் தந்த பட்டமெனில் வதைபடும் மக்களுக்காக பேசியிருப்பார்கள்.இது அதிகார கூட்டத்தால் வந்த பட்டமாச்சே?ஜல்லி அடிக்கத்தான் செய்வார்கள்.வரலாற்றில் கம்பர் நிற்க்கிறார்;ஒட்டகூத்தன்?கம்பர் சோழ ஆதிக்கத்தை எதிர்த்தவர்;கூத்தரோ ஜல்லி அடித்துக் கொண்டிருந்தவர் .மக்களின் ஞாபகக்  கிடங்கு தேவயானவற்றை ஒரு போதும் மறக்காது.

No comments:

Post a Comment