Sunday, September 20, 2020

புலம்பெயர் தொழிலாளிகளும் தொழிற்பேட்டைகளும்

 



அடுத்த கதை- ஆதவன் தீட்சண்யா

தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகளை ஸ்கேன் வாசிப்பில் வாசித்த பொழுது எட்டாவது கதையான இந்தக் கதை தரவு ஒன்றிற்காக அவசியமாக இருந்தது.

மீதிக் கதைகளை அடுத்தடுத்து எழுதுவோம்.     

தொழிற்பேட்டையின் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு பணிக்கு ஆட்களை தரும் மேன்பவர் சப்ளை ஏஜென்சிகள் வழி தொழிற்நுட்பம் ஏதும் தெரியாத ஜக்லால் எனும் வடமாநில புலம்பெயர் தொழிலாளி வேலைக்கு வந்த சிலநாட்களில் தொழிற்சாலையின் எந்திர  விபத்தில் சிக்கி உடல் வேறு கால்  வேறு என அறுபட்டு இறந்து போகிறான்.

தொழிலாளியின் இறப்பை மறைக்கும் கூட்டுச்சதியை மருத்துவரும் மருத்துவமனை ஊழியரும்  அறிகிறார்கள் .

இறந்து  போன ஜக்லாலின் ஐடி கார்டை வைத்துக் கொண்டு , ஜக்லாலை அறிய வருகிறார் மருத்துவ ஊழியர் .

அப்படி ஒரு நபரே தங்களிடம் வேலை பார்க்கவில்லை என தொழிற்சாலை நிர்வாகிகளும்  மேன்பவர் சப்ளை ஏஜென்சிகளும் சொல்கின்றனர்.

ஜக்லாலின் படம் போட்ட ஐடி கார்டை காட்டி இதற்கு பதிலென்ன என கேட்கிறார் மருத்துவ ஊழியர்.

ஒருவரின் படத்திற்கு பல்வேறு பெயரிலான ஐடி கார்ட்கள் இருப்பதை காட்டி,மேன்பவர் சப்ளை நிறுவனங்களில் இதெல்லாம் சாதாரணமாக நடப்பதுதான் என்று சொல்லி விட்டு, கடந்து போவதை கேட்டு  பதை பதைக்கிறார் மருத்துவ  ஊழியர் . 

ஓர் எழுத்தாளராக மருத்துவ ஊழியர் இருப்பதால் முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டல் வடிவத்தை அறிந்து அதிர்கிறார்.

ஆற்றாமையை இயலாமையை கதையில் சொல்வதன் வழி ஆறுதல் தேட முயல்வதோடு கதை முடிகிறது.

புலம்பெயர் மக்கள் இவ்வாறான கடுமையான சுரண்டலிற்கு ஆளாவதை   பொது சமூகம் அறியாமல் இருக்கிறது.

சுரண்டலையும் அறியாமையையும் பொது சமூகப் பார்வைக்கு வைப்பது எழுத்தின் கடமை என்பதை இக்கதை உணர்த்துகிறது. வாழ்த்துக்கள் ஆதவன் தீட்சண்யா . 

அற்புதமான வடிவில் கருப்பு பிரதி  112 பக்கத்தில் 100 விலையில்  தொகுப்பை இந்த சனவரியில் வெளியிட்டுள்ளது . 

No comments:

Post a Comment