-இரா.தெ.முத்து
தம்பட்டம் போட்டுக் கொண்டு விளம்பரப்படுத்திக் கொள்ளாத உண்மை
இருப்பிலேயே தான் புரிந்து கொள்ளப்பட வேண்டுமென்று கோரி நிற்கிறது
தான் உண்மையாக இருக்கிறேனென்று உண்மை எப்படி
சொல்ல இயலும்?
உணரப்பட வேண்டும் உள் வாங்கப்பட வேண்டும் என்றே
விரும்புகிறது உண்மை
பொய்மைகள்
உழலும் கிரகத்தில் உண்மையின் வெளிச்சம் கண்டுக் கொள்ளப்படாது
போவதென்பது
பெருஞ் சோகந்தானெனினும்
நிரந்தரமில்லை
என்பதை
புரிந்து
கொண்டிருக்கிறது உண்மை
பொய்
புனைசுருட்டு பம்மாத்து பணங்களில் சாய்ந்தது பொதுமனம்
என்று
மொட்டையாக கருத்து சொல்ல விரும்பாத உண்மை
உண்மையின்
உண்மையை பொதுமனதோடு கொண்டு சேர்க்க
தொடர்ந்த
உரையாடலையும் களமாடுதலையும் முன் மொழிகிறதெனினும்
எக்காலத்திற்கும்
பொய்மை தன்னை பாதுகாத்திட இயலாதென்ற
வரலாற்றுக்
கணக்கையும் வரித்துக் கொண்ட உண்மை
வீடு
வீடாக வாழ்க்கையின் உண்மையை
சலுகை உரிமை நியாயங்களின் உண்மையை
கொண்டு சேர்க்க உண்மையின் முகத்தோடு உண்மையாய் நிற்கிறது காலஉண்மை
நன்றி:வீதி இதழ்/2014 ஜூன்
வணக்கம்
ReplyDeleteஉண்மை எப்போதும் அழியாது. மக அருமையாக சொல்லியுள்ளீர்கள் படமும் அழகு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்
ReplyDelete