Wednesday, April 15, 2015

குண்டர்கிராஸ் மறைந்தார்





குண்டர் கிராஸை நான் 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிவேன்.அப்பொழுது கிராஸ் இந்தியாவிற்கு வந்திருந்தார்.தாய்மொழி ரீதியிலான புரிதல் மட்டுமே அறிவை கலையாற்றலை வளர்க்க இயலும்;ஆங்கிலத்தினால் அன்று என்று அவர் கொடுத்த பேட்டி வழியாக அவர் மீதான் ஆர்வம் அதிகரித்தது.

ஜெர்மனி சார்ந்த நாவலாளர்-விமர்சகர்-கலைவிமர்சகர் எனும் பன் முகம் கொண்டவர் கிராஸ்.நோபல் பரிசு வெற்றியாளரும் கூட.எனினும் இஸ்ரேல் ,  பாலஸ்தீனர்கள் மீதும் ஈரான் மீதும் கொடும் ஆயுதத் தாக்குதலை-அணு ஆயுத மோதலை உருவாக்கிய 2006 களில் கிராஸ் கேட்ட கேள்வி `நாம் என்ன சொல்ல வேண்டும்?’

இந்தத் தலைப்பின் கவிதை இஸ்ரேலை அச்சப்படுத்தியது;அமெரிக்காவை எரிச்சல் செய்தது.எனினும் கிராஸின் கவிதை உலகம் முழுவதுமுள்ள சமாதானப் பிரியர்களுக்கு பெறும் உற்சாகத்தை தந்தது.

கவிதை எனப்படுவது யாதெனின் என்று நுரைத் தள்ளப் பேசுபவர்கள் குண்டர்கிராஸ்  எழுதிய இந்தக் கவிதையை வாசிக்க வேண்டும்.

ஜெர்மனியின் லுபெக் நகர வீட்டில் தன் 87 ஆம் வயதில்   இலக்கிய பரிசோதனை எனும் நூலிற்கான பணியில் இருந்த பொழுது,  13 ஆம் திகதி மறைந்திருக்கிறார் கிராஸ்.

2 comments:

  1. குண்டர் கிராஸ் பற்றி தமிழில் முதன் முதலாக பதிவு செய்தமைக்கு வாழ்த்துகள்.மேலும் உங்கள் வலைப்பூவை நன்கு வடிவமைத்து போடவும்

    ReplyDelete
  2. நன்றி;நீங்கள் உதவினால் வலைப்பூவை சீர் செய்யலாம்

    ReplyDelete