Saturday, June 14, 2014

முதலாம் பராந்தக சோழன் காலத்து அபூர்வ சிற்பம்

நாம் காண்கிற இந்த சிற்பங்கள் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருக்கடையூர் தாண்டி இருக்கின்ற புஞ்சை என சொல்லப்படுகின்ற பொன்செய்வயல் என்ற கிராமத்தின், சிவன் கோவிலின் மூலட்டான சுற்று சுவரில் காணப்படுகின்றவையாகும்.

சோழ மன்னன் முதலாம் பராந்தகனின், இராஜ இராஜ சோழனின் தாத்தா காலத்தியது ஆகும்.கி.பி 9 ஆம் நூற்றாண்டு காலத்தின் சிற்பங்கள் இவைகள். பல்லவர் காலத்தின் சிற்ப முறைமையை பின்பற்றினாலும்,அதிலிருந்து தனித்த அடையாளத்தையும் கொண்டது.பல்லவர்களின்  5 ஆம் நூற்றாண்டு காலத்தின் மாமல்லபுர சிற்பங்கள்,ஒரே பாறையின் முகப்பை தட்டையாக செதுக்கி வடிவமைத்துக் கொண்டு,பின் அதிலிருந்து புடைப்பு முறையில் குடைந்து செய்யும் பாணியாகும்.இதில் பல்வேறு புராண கதைகளை வடிவமைத்துக் கொண்டார்கள.இந்தப் பாறையின் உயரம் 30 மீட்டர் இருக்கும் அகலம் 60 மீட்டா ஆகும்.

பொன்செய்வயலின் சிற்பங்களும் பல்வேறு கதைகளை சொல்லும் நடனம்,இசை மரபை சொல்லும் சிற்பங்கள் தான்.,மகாபாரதம்,இராமாயாணம்,சொல்லும் பல கதைகள் சிற்பங்களாக்கப்பட்டுள்ளன.ஆனால் 30 செண்டி மீட்டர் அகலமுள்ள கற்கள்  ஒவ்வொன்றிலும் பல கதைகள் அவ்வளவு தீர்க்கமாக செதுக்கப்பட்டுள்ளன என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

பிரமாண்ட பாறையில் செதுக்கப்பட்ட பல்லவர் காலத்து ஓவிய முறையிலிருந்து மாறுபட்டு,அதே பாணியை  30 செண்டிமீட்டரில் குறுக்கி குடையப்பட்ட சிற்பங்கள் நம்மோடு சோழர்களின் கலை வரலாற்றை பேசிக் கொண்டிருக்கிறது.இந்தக் கோவிலின் சிற்பத்தை எனக்கும் கவிஞர் ச.விசயலட்சுமிக்கும் சொல்லி ஆற்றுபடுத்தியவர் தமிழ்நாட்டின் மக்கள் ஓவிய ஆளுமை சந்ரு ஆகும்.

இதற்கு முன் பின் இந்தியாவில் எங்குமே இந்த பல்லவ,சோழ சிற்ப மரபை பார்க்க இயலவில்லை என்கிறார் சந்ரு.அரிய சிற்ப மரபை எமக்கு அறிமுகம் செய்த சந்ரு அவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.

4 comments:

  1. அருமையான சிற்பங்களைக் காட்டி திறம்பட விளக்கியதற்கு மிக்க ந்ன்றி ஐயா.

    கோபாலன்

    ReplyDelete
  2. மகிழ்ச்சி திரு.கோபாலன்

    ReplyDelete
  3. “தான் கண்டு, கேட்டு, மகிழ்ந்த அரிய சிற்ப மரபையும்,ஓவிய ஆளூமை சந்துருவையும் வலைத்தளத்தில் பதித்த முத்தே...பாராட்டி மகிழ்கிறேன்..மதுரை சௌந்தர்

    ReplyDelete
  4. மகிழ்ச்சி திரு.மதுரை சவுந்தர்ராஜ்

    ReplyDelete